யாழ் மாநகரசபையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா 29.07.2023 ஆம் திகதி நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இயல், இசை, நாடகத்துறையில் பெரும்பங்காற்றிய கலாபூஷணம் கோகிலா மகேந்திரன், கலாபூஷணம் எம்.பி.பாலகிருஞ்ணன், கலாகீர்த்தி சாந்தினி சிவநேசன் ஆகியோர் யாழ் மாநகரசபையின் உயரிய விருதான அரசகேசரி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இயல், இசை, நாடக அரங்குகளாக நிகழ்ந்த நிகழ்வுகளில் ஈழநல்லூர் நாதஸ்வர இளவரசன் பிச்சையப்பா ரஜீந்திரன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரியும், இசை நாட்டிய நாடக அரங்கில் ஏழிசை மிருந்தங்க நர்த்தனாலயத்தின் வெந்து தணிந்தது காடு எனும் நாட்டிய நாடகமும், இயல் அரங்கில் எம் மண்ணில் இன்றைய சூழலில் உயர்கல்வியும், மனிதநேயம், கலாசார பண்பாடுகளும் எனும் தலைப்பில் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் நடைபெற்றது.