நூலக சேவைகள்

   

யாழ்.பொதுசன நூலகமானது யாழ்.மாநகர சபையின் ஆளுகையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனங்களுள் 1981 ம் ஆண்டுற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாக பேசப்பட்ட ஒரு நூலகமாகும். 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும் பொதுமக்களினதும் பல உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களினது தாராளமான உதவியினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனமானது அதன் நூற்றாண்டு நிறைவை அண்மித்துக்கொண்டிருந்தபோது 1981ம் ஆண்டு ஆனிஒன்றில் எரிக்கப்பட்டு சாம்பலானது. இதன் கட்டிடம் மீண்டும் மீளளிக்கப்பட்டு புதிய நூல்கள் சேர்க்கப்பட்டு தன்னிறைவுடன் இன்றும் சிறந்து விளங்கும் நூலகமாகும்.

 

நூலகத்தின் வழமையான செயற்பாடுகள்

எமது நூலகத்தில் வாசகர்களுக்கு சேவையினை வழங்குவதற்கு தகவல் வழங்கும் பகுதி, இரவல் வழங்கும் பகுதி, பருவவெளியீட்டுப்பகுதி, சிறுவர்பகுதி, இந்தியப்பகுதி, ஆவணாக்கல்பகுதி, உசாத்துனைப்பகுதி, விசேடசேர்க்கைப்பகுதி, கணனிப்பகுதி என்பன உள்ளன.

பருவவெளியீட்டுப்பகுதி

தினசரி பத்திரிகைகளையும் பல்வேறு விதமான பருவ இதழ்களையும் கொண்ட பகுதியும் வாசகர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதியும் இதுவேவாகும். மூன்று மொழிகளிலும் உள்ளடங்கிய பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் இங்கு காணப்படுகின்றது.

சிறுவர் பகுதி

சிங்கப்பூர் சர்வதேச நிறுவனத்தால் நவீனமயப்படுத்தப்பட்டு சிறுவர்களை கவரும் வகையில் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. கதை சொல்லும் நேரம், வர்ணம் தீட்டுதல், சொற் சிலம்பு என்பன பிரதி சனிக்கிழமைகளில் நடைபெறுகின்றன.

 

இரவல் வழங்கும் பகுதி

நூலகத்தில் இரவல் வழங்கும் பகுதியினால் பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர்கள் நிபந்தனைக்குட்பட்டு நூல்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிப்பதற்கு ஏற்ற வசதிகளை இப்பகுதி வழங்குகின்றது.

உசாத்துணைப்பகுதி

வாசகர்கள் தனித்துவமான தகவலைப் பெறும் நோக்குடன் காலத்திற்கு காலம் குறிப்பெடுக்கவென வடிவமைக்கப்படும் நூல்கள் உசாத்துணை நூல்கள் எனப்படும். பாடவிதானத்துடன் தொடர்புடைய நூல்கள் அனைத்தும் இவற்றுள் அடங்கும்.

கணனிப்பகுதி

ஒரே நேரத்தில் 10 பேர் இணையத்தின் மூலம் தகவல்களை பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்விக்கு தேவையானவற்றை தரவிறக்கம் செய்து பிரதிகள் செய்து கொடுக்கப்படும். கற்றலிற்காக வாசகர்களிற்கு இலவசமாக இச்சேவை வழங்கப்படுகிறது.

இளையோர் பகுதி 

ஆங்கில கல்வியை மேம்படுத்தும் முகமாக 14–19 வயது வரையான பாடசாலை மாணவர்கள் இலவசமாக இணையமுடியும். இலவச இணைய சேவையும் வழங்கப்படுகிறது. இந்தப்பகுதியில் பெண்கள் தாமாகவே சுயமாக படிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் பகுதி

இந்திய நூல்களை மட்டும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பகுதியாக இது விளங்குகின்றது. இரவல் வழங்கும் பகுதியை பயன்படுத்தும் வாசகர்களும் இப்பகுதியை பயன்படுத்துகின்றனர்.

  நூலக வசதிகளை பாவிப்பதற்காக|வோ அல்லது தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு     முன்னலுவலக உத்தியோகத்தர் 0212219557 பொறுப்பதிகாரி பொது நூலகம் பகுதி 0212226028