தீயணைப்பு சேவைகள்

 

யாழ் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தீயணைப்புச் சேவையை வழங்கி வரும் எமது சபையின் தீயணைப்புச் சேவை விதந்துரைக்கப்பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுகின்றது. நாளாந்தம் காலை தீ தடுப்புக்காகப் பயன்படும் வாகனம் மற்றும் உபகரணங்கள் துப்புரவு செய்யப்பட்டுத் தயாராக இருக்கும்.

விடமுக்கியஸ்தர்கள் வருகைதரும் நாட்களில் பொலீஸ் அத்தியட்சகரின் அழைப்பின் பேரில் தீயணைப்பு வாகனம்,அம்புலன்ஸ் வாகனங்களுடன் தீயணைப்பு குழுவினர் கடமையில் ஈடுபடுகின்றனர்

பாடசாலைகள், அரச நிறுவனங்கள் போன்றவற்றில் வளவாளர்களாக கலந்து கொண்டு தீயணைப்பு தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

மருத்துவமனை, நிறுவனங்களில் பொருத்தப்பட்ட தீயணைப்பு உபகரணங்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர்

குளவிக்கூடு அகற்றுதல், பாம்பு,முதலை என்பவற்றை பிடித்து பாதுகாப்பான இடங்களில் விடுதல் மற்றும் கிணறுகள்,குழிகளில் விழுந்த மாடுகளை மீட்டுக் கொடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

தீயணைப்புச் சேவையின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்

அலுவலகம் –  021 222 2275

பொறுப்பதிகாரி – 0773105969