திண்ம மற்றும் திரவ  கழிவு முகாமைத்துவம்

 

உள்ளுராட்சி மன்றங்களினால் வரிப்பணம் அறவிடப்படுகின்ற பிரதேசத்திற்குள் அமைந்துள்ள வீடுகளிலுள்ள கழிவுகள் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகளை சேகரித்து அகற்றுதல் அந்த உள்ளுராட்சி நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. வரிப்பண வலயத்திற்குள் அமைந்துள்ள வசிப்பிடமற்ற சொத்துக்களிலிருந்து மற்றும் வரிப்பண வலயத்திற்குப் புறம்பாக ஏதேனுமொரு இடத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி மன்றங்களிற்கு சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் சேருகின்ற கழிவுகளை உரிய விதத்தில் அகற்றும் செயற்பாடானது அந்த இடத்தில் வசிப்பவர்களினால் மேற்கொள்ளப்படல் வேண்டும். எனினும் அத்தகைய நபர்களுக்கு தமது வளாகத்தில் உருவாகின்ற கழிவுகளை தம்மாலேயே முகாமைத்துவம் செய்து கொள்ள முடியாதுபோகும் சந்தர்ப்பத்தில் மற்றும் அந்த கழிவுகளை உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக அகற்ற வேண்டுமெனின், அதற்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையின் மீது உள்ளுராட்சி மன்றங்களுக்குப் போதுமான இயலுமை காணப்பட்டால், கட்டணங்களை அறவிட்டு அவ்விடங்களில் உருவாகும் கழிவுகளை உள்ளுராட்சி மன்றங்கள் அகற்றுதல் பொருத்தமாகும்.

 

27 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்ட மாநகர சபை எல்லைக்குள் 09 பிரட்டு அலுவலகமாக உள்ளடக்கப்பட்டு பொது மக்களின் திண்மக்கழிவுகள் அகற்றப்பட்டது. அதன் பிரகாரம் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு மேற்பார்வையாளர், ஒவ்வொரு கழிவகற்றல் வாகனம் மற்றும் கைவண்டில்கள் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டு திண்மக்கழிவகற்றல் செயற்பாடுகள் தினமும் நடைபெறுகின்றது. அவற்றின் ஊடாக பெறப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு (வகைப்படுத்தி) பெற்றுக்கொள்ளப்பட்ட வருகின்றது

 

மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உருவாகும் திரவக்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதுடன். மாநகர சபை வாகனங்கள் 03 ம் அதற்கு மேலதிகமாக ஒப்பந்த வாகனங்கள் 05 ம் கடமையில் ஈடுபடுகின்றது.

திண்ம மற்றும் திரவக்கழிவகற்றல் தொடர்பான விபரங்கள் மற்றும் உதவிகளுக்கு பின்வரும் தொலைபேசி மூலம் சேவைகளை பெற்றுக் கொள்ளமுடியும்

  • முன்னலுவலக உத்தியோகத்தர்                                         - 0212219557
  • பொறுப்பதிகாரிபொதுசுகாதாரபொறியியல் பகுதி       -0213207625
  • விடயஉத்தியோகத்தர்                                                              -0213207625