பாதுகாப்பான குடிநீர்விநியோகத்திட்டம்

யாழ் மாநகரசபை நீர்வேலைப்பகுதியானது நிகழ்ச்சித்திட்டம் 04 ற்குள் உள்வாங்கப்பட்டு பொது நிர்வாகம் (01),பிரதானவேலைகளை பராமரித்தல் (03), விநியோகம் (04) சேவை இணைப்புக்கள் (05) ஆகிய கருத்திட்டங்களாக பிரிக்கப்பட்டு மாநகர ஆளுகைக்குட்பட்ட வரியிறுப்பாளர்களுக்கான குடிநீர்த்தேவையை குறைந்த கட்டணத்தை அறவிட்டு பூர்த்தி செய்தலும், தொடர்ச்சியாக மேற்கொள்வதனை தனது பாரிய பணியாகக் கொண்டு சேவையை வழங்கி வருகின்றது

 

பிரதான நீர்விநியோகத்திட்டம்

கோண்டாவில் பம்நிலையம்

கோண்டாவில் பம்நிலையத்தின் காணியின் அளவு 11 ஏக்கர் 0 றூட் 35.9 பேச் உள்ளது. இங்கு நான்கு கிணறுகளில் மூன்று கிணறுகள் துணைக்கிணறுகளாகவும் மற்றையது கிணறாகவும் செயல்படுகின்றது. இங்குள்ள குடிநீரானது பலாலிவீதி ஊடாக பிரதானவீதி நிலத்திற்குகீழ் நீர்குழாய் மூலம் பிரதானதாங்கிக்கு குடிநீர் ஏற்றப்படுகின்றது இக்கிணற்றிலிருந்து பொதுநீர்க்கம்பங்கள் மூலம் நீர்வழங்குவதென்றே உருவாக்கப்பட்டது.

 

திருநெல்வேலி பம்நிலையம்

திருநெல்வேலிபம்நிலையத்தின் காணியின் அளவு 2 ஏக்கர் 1 றூட் 17.4 பேச்சும் உள்ளது இந்;நிலையம் பழமையான நன்னீர் கிணறு அத்துடன் 6 ஊழவெசழட ஏயடஎந புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பம் நிலையத்திலிருக்கும் கிணற்றிலிருந்து குடிநீர் பலாலிவீதி ஊடாக கடற்கரைவீதிவரை நிலத்தின்கீழ் நீர்குழாய் மூலம் குருநகர்தாங்கிக்கு நீர் ஏற்றப்படுகின்றது. இக்குடிநீர் குருநகர் வீடமைப்புத்திட்டம், அரசினர்வைத்தியசாலை பனிக்கட்டிச்சாலை, பொலீஸ்நிலையம் போன்றவற்றுக்கு நீர்விநியோகிக்கப்படுகின்றது.

 

நீர் விநியோகம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் தகவல்கள் பெற்றுக்கொள்வதற்கு

 

முன்னலுவலக உத்தியோகத்தர்
0212219557

பொறுப்பதிகாரி நீர்வேலை பகுதி
0212223499

விடயஉத்தியோகத்தர்
0212223499