யாழ்ப்பாண மாநகரசபை

யாழ்ப்பாண நகரத்தை நிர்வாகம் செய்துவரும் உள்ளூராட்சி அமைப்பு.

1861 ஆம் ஆண்டில் வீதிக் குழு (சாலை குழு) என அழைக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபையைப் போன்ற ஒரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், 1906 ஆம் ஆண்டு மற்றும் 1898 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (உள்ளூர் வாரியம்) உருவானது. 1921 ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (நகர மாவட்ட கவுன்சில்) ஆகவும், பின்னர் 1940 இல், நகரசபையாகவும் தரம் உயர்த்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.

இது வட்டாரம் என அழைக்கப்படும் 23 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் வெவ்வேறாக உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி நகர முதல்வர் (Mayor), துணை நகர முதல்வர் ஆகியோரைத் தெரிவு செய்வர். புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட பின்னர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதிலும் விகிதாசாரத் தேர்தல் முறை மூலம் 23 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். நகரபிதா, துணைநகரபிதா ஆகியோரையும் மக்களே நேரடியாகத் தெரிவு செய்கின்றனர்.

நிர்வாக கட்டமைப்பு

யாழ் மாநகரசபை நிர்வாக கட்டமைப்பு

செய்திகள்

அண்மைய யாழ் மாநகரசபை செய்திகள்.