Uncategorized

UNDP மற்றும் யாழ் மாநகரசபையின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான சமுதாயத்தை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்

யாழ் மாநகர சபையின் பெண் உறுப்பினர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற UNDP மற்றும் யாழ். மாநகரசபையின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட மகிழ்ச்சிகரமான சமுதாயத்தை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் நிகழ்வானது முத்தமிழ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது. இச் செயற்றிட்டத்தினூடாக நான்கு சனசமுக நிலையங்களுக்கு புத்தகங்கள் மற்றும் புத்தக அலுமாரிகள் வழங்கும் செயற்றிட்டமும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு சத்துணவு மற்றும் சுயசார்ப்பு பொருளாதார வளர்ச்சிக்கான மரங்கன்றுகளும் வழங்கப்பட்டனயாழ்.மாநகர சபை உறுப்பினர் இ.இராகினி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர், UNDP யின் பிரதிநிதிகள் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கெண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *