USAID நிறுவனத்தின் ‘தூய நகரம் நீலக் கடல்’ என்னும் செயற்றிட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள யாழ்.மாநகர சபையின் வட்டாரக் கழிவகற்றல் முறைமையினை மேம்படுத்தும் நோக்குடனான முதலாவது செயலமர்வு 2022.10.18 ஆம் திகதி நடைபெற்றது.ஒரு வட்டாரத்திலுள்ள அனைத்து வீதிகளிலும் கழிவற்றல் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் முகமாகவும், வட்டாரங்களில் கழிவற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற வாகனங்களின் வழித்தடத்தினை இலத்திரனியல் மயப்படுத்தும் வகையிலும், வட்டார கழிவற்றல் வாகனங்களின் வழித்தடத்தினை வட்டார ரீதியாக உருவாக்கும் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது. வண்ணார்பண்ணை, குருநகர் 1, கொழும்புத்துறை ஆகிய பிரட்டு மையங்களுக்கு உட்பட்ட 8 வட்டாரங்களின் கழிவற்றல் வழித்தடங்கள் சிரேஸ்ட மேற்பார்வையாளர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள், வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் துணையுடன் வரையப்பட்டது. இச்செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
USAID நிறுவனத்தின் ‘தூய நகரம் நீலக் கடல்’ என்னும் செயற்றிட்டத்தின் கீழ் கழிவகற்றல் முறைமையினை மேம்படுத்தும் செயலமர்வு
19
Oct