யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவர் மிச்சல் அபேல்டன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று யாழ் மாநகர சபையில் 2022.10.05 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பிலும்,யாழ் மாநகர சபையின் கட்டமைப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இந்திய நிதிப் பங்களிப்பில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபம் மாநகர சபைக்கு ஒப்படைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும். அதே போன்று பலாலி விமான நிலையம் மக்கள் பாவனைக்கு விடப் பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் மாநகர முதல்வர் தூதுவருக்கு முன்வைத்தார். முடியுமான அழுத்தங்களை கொடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை வாழ வழி செய்வோம் என தூதுவர் இதன் போது உறுதி மொழி வழங்கியுள்ளார்.யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் யாழ் பொது நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
மாநகர சபை முதல்வருக்கும் நியூசிலாந்து நாட்டுத் தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு
13
Oct