1330 குறப்பாட்களுக்குள் மனித வாழ்வியல் தத்துவங்கள் அத்தனையும் உள்ளடக்கி உலக பொதுமறை நூலாக விளங்கும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலையுடன் கூடிய சுற்றுவட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.தூய நகரம் அழகிய மாநகரம் என்ற மாநகர முதல்வரின் துரித அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் கீழ் ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திரு. திலகராஜின் நிதிப் பங்களிப்பில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியிலுள்ள யாழ்ப்பாண பிரதம தபாலகத்திற்கு முன்பாகவுள்ள சுற்று வட்டத்தினை மீளமைத்து அழகுபடுத்தப்பட்டு சுற்று வட்டத்தின் நடுவே திருவள்ளுவரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அப்பகுதி அழகுபடுத்தப்படவுள்ளது.அச் செயற்றிட்டத்தின் அங்குரார்பண நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ.வி.மணிவண்ணன், ரில்கோ தனியார் விடுதியின் உரிமையாளர் திரு.திலகராஜ், யாழ் மாநகர ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
திருவள்ளுவரின் சிலையுடன் கூடிய சுற்றுவட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
13
Oct