செய்திகள்

US AID நிறுவனம் யாழ்.மாநகர சபையுடன் இணைந்து முன்னெடுக்கும் தூய்மையான மாநகரம் நீலக்கடல் செயற்றிட்டம்

USAID நிறுவனம் யாழ்.மாநகர சபையுடன் இணைந்து முன்னெடுக்கும் தூய்மையான மாநகரம் நீலக்கடல் செயற்றிட்டத்தின் கீழ் மாநகர சபையின் திண்மக்கழிவற்றல் உத்தியோகத்தர்களுக்கும் தூய்மைப்பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அணிகலங்கள் வலம்புரி விருந்தினர் விருந்தகத்தில் வழங்கப்பட்டது.மாநகநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் US AID நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் திருமதி நளீனா விஜயநாயக்க, செயற்றிட்டப் பணிப்பாளர் இகனக்கே,மற்றும் சண்முகராஜா, யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன், யாழ்.மாநகர சபை சுகாதாரக்குழு தலைவர் வரதராஜன் பார்த்திபன், யாழ்.மாநகர பொறியியலாளர் இ.சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். Clean City Blue Ocean என்கின்ற தொனிப் பொருளுடன் US AID நிறுவனம் அடுத்து வரும் 5 ஆண்டுகள் யாழ்.மாநகர சபையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது. அச் செயற்றிட்டத்தின் முதற் கட்டமாக யாழ்.மாநகர சபை திண்மக்கழிவற்றலுடன் தொடர்புடைய மேற்பார்வையாளர்கள்,தூய்மைப்பாணியாளர்கள் என அனைவரையும் ஒன்றாக அழைத்து விருந்தளித்து அவர்களுக்குரிய பாதுகாப்பு அணிகலன்களைகளை வழங்கியது.அத்துடன் அப்பாதுகாப்பு அணிகலன்களின் பயன்பாடு, அதனை எவ்வாறு பன்படுத்துவது, அதனை பயன்படுத்தாது விடின் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *