செய்திகள்

யாழ்ப்பாண மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா 2022

யாழ்ப்பாணம் மாநகரசபையினால் IBC தமிழ் நிறுவனத்தின் அனுசரணையுடன் முதன் முறையாக முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழாவானது, 2022.01.16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இயல், இசை, நாடகம் என மூன்று அரங்குகளாக நடைபெற்றது.


இயல் அரங்கானது மு.ப 8.30 – பி.ப 1.00 மணி வரை நடைபெற்றது. இவ்வரங்கில் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையில் ‘இன்றைய உலக நடைமுறைக்குப் பொருந்தாத அறங்களை வகுத்துத் தந்த வள்ளுவர் குற்றவாளி’ எனும் தலைப்பிலான வழக்காடு மன்றம் இடம்பெற்றது. இயற்துறைக்கு பெரும்பங்காற்றியமைக்கான அரசகேசரி விருது கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இசை அரங்கானது பி.ப 3.30 – பி.ப 5.45 மணி வரை நடைபெற்றது, இவ்வரங்கில் ஈழ நல்லூர் பாலமுருகன், குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாத சங்கமும், ஈழத்தின் புகழ் பெற்ற மூத்த, இளைய இசைக்கலைஞர்களின் இணைந்த இசை ஆராதனையும் இடம்பெற்றது. இசைத்துறைக்கு பெரும்பங்காற்றியமைக்கான அரசகேசரி விருது இசைவாணர் முத்துக்குமாரு கோபாலகிருஷ;ணன் (கண்ணன்) அவர்களிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


நாடக அரங்கானது பி.ப 7.00 – பி.ப 10.00 மணி வரை நடைபெற்றது. இவ்வரங்கில் சத்தியவான் சாவித்திரி இசை நாடகமும், வீரபாண்டிய கட்டப்பொம்மன் நாடகமும் இடம்பெற்றது நாடகத்துறைக்கு பெரும்பங்காற்றியமைக்கான அரசகேசரி விருது அண்ணாவியார்.வ.அல்பிரட் அவர்களிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *