2022.12.15 ஆம் திகதி சீன தூதுவர், மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர், அவர்கள் இன்று சீன நாட்டின் தூதுவர் பொது நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு கணனிகளையும் மேலும் பல புத்தகங்களையும் நமக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த பொது நூலகத்தினை இணைய வழியிலான நூலகமாக மாற்ற உதவ முடியுமா என கோரிக்கை முன்வைத்த போது அது தொடர்பாக பரிசீலிப்பதாகவும் கூறியிருந்தார் எனத் தெரிவித்தார்.
சீனத்தூதுவர் சந்திப்பு

31
Jan