யாழ் மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இணைந்து யாழ் மாநகர சபை முன்னெடுக்கும் ‘காணும் பொங்கல்’ நிகழ்வானது 2022.01.23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணியளவில் யாழ் பண்னைக்கடற்ரையில் நடைபெற்றது. தமிழ்ப் பாரம்பரியம் மிக்க பொங்கல் நிகழ்வில் யாழ் மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்களுடன் யாழ் மாநகர சபையின் அனைத்து நிர்வாக அலகுகளின் உத்தியோகத்தர்களும் இணைந்து 50 இற்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் நிகழ்வும், சின்னஞ்சிறர்களை மகிழ்வுட்டுவதற்காக அவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்;துடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கயிறு இழுத்தல், முடடி உடைத்தல் போன்ற நிகழ்வுகளும் நடை பெற்றன. எமது உறவுகள் ஒன்று சேரும் காணும் பொங்கலில் அனைவரும் பங்குபற்றி தமது திறமைகளையும் வெளிக்கொணர்ந்து பரிசில்களையும் பெற்று விழாவை சிறப்பித்தனர்.
காணும் பொங்கல் விழா 2022

31
Jan