யாழ் மாநகர முதல்வர் திரு.வி.மணிவண்ணன் அவர்களின் ‘தூய அழகிய நகரம்’ திட்டத்தின் தொடர்ச்சியாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதி அனுசரணையுடன் 2021.12.08 ஆம் திகதி புதன்கிழமை மறவர்குளப் புனரமைப்பின் அடிக்கல் நாட்டும் நிகழ்வானது மாநகரசபையின் கௌரவ பிரதி முதல்வர் திரு.து.ஈசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர முதல்வர், ஆணையாளர், செயலாளர், பொறியியலாளர், அவ்வட்டார உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். குறித்த துரித செயற்திட்டத்திற்கான திட்ட வரைபினை ஊயnழிரள நிறுவனத்தின் உரிமையாளர் துளசிவர்மன் அழகுற வடிவமைத்திருந்தார். குறித்த திட்ட வரைபிற்கான நிஜ வடிவமானது ஆழனந நுபெiநெநசiபெ நிறுவனத்தினரால் புனரமைத்து கையளிக்கப்படவுள்ளது.
மறவர்குள புனரமைப்பின் துரித அபிவிருத்தி திட்டம்

15
Dec