யாழ். மாநகர முதல்வர் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் ‘தூய நகரம்’ திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் திரு.வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழா 2021.12.02 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
யாழ்.மாநகர முதல்வர் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.தியாகந்திரன் அர்ச்சுனா மற்றும் செல்வி நிலாஜினி தியாகேந்திரன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும், கௌரவ உறுப்பினர்கள், மாநகர சபை ஆணையாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் இசைக்கலைஞர்களுக்கான கௌரவிப்பு இடம்பெற உள்ளதோடு, மு.P குமரன் பஞ்சமூர்த்தி குழுவினரின் நாதசங்கமம், வாண வேடிக்கைகள், தண்ணீர் விசிறல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
