யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி நாளை 2021.11.24 ஆம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடமாடும் சேவை நாவாந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறவுள்ளது. வட்டாரம் 01,18,19,20 மற்றும் 21 ஆம் வட்டாரங்களிற்கான பெயர் மாற்ற விண்ணப்பப்படிவம் வழங்கல், துவிச்சக்கரவண்டி உரிமம் வழங்கல் போன்ற சேவைகளை வழங்குவதுடன் பொதுமக்களால் இதுவரை காலமும் செலுத்தப்படாதுள்ள சோலைவரி நிலுவைகள் மற்றும் நடப்பாண்டு சோலைவரி, தண்ணீர் வரி போன்றவற்றை செலுத்தி மாநகர சபையின் சேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர முதல்வர் திரு.வி.மணிவண்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாநகர சபையின் நடமாடும் சேவை – நாவாந்துறை

23
Nov