யாழ் மாநகர முதல்வர் திரு.விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் முயற்சியில் சைவத் தமிழ் ஆர்வலர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பினை பூர்த்தியாக்கும் வகையில் யாழ் மாநகரசபையின் உறுதுணையுடன் அகில இலங்கை சைவ மகா சபையினால் நாவலர் கலாசார மண்டபத்தில் சிவசிற்ப வாரிதி உ.கயேந்திரன் அவர்களினால் வடிவமைக்கப்பட்ட சீர்வளர்சீர் ஆறுமுகநாவலர் பெருமான் திருவுருவச் சிலையானது திருநிலைப்படுத்தப்பட்டது. இச்சிலையினை கார்த்திகை தீபத்திருநாளான 2021.11.18 ஆம் திகதி வியாழக்கிழமை மாநகர முதல்வர் அவர்கள் திறந்து வைத்தார்.
நாவலர் கலாசார மண்டபத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட ஆறுமுகநாவலர் சிலை!
19
Nov