செய்திகள்

நல்லைக்குமரன் நூல் வெளியீடும் விருது வழங்கலும் – 2021

யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவால் 2021 ஆம் ஆண்டுக்கான நல்லைக் குமரன் நூல் வெளியீடும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் 2021.11.05 ஆம் திகதி நாவலர் மண்டபத்தில் மாநகர ஆணையாளரும் யாழ் மாநகராடசி மன்ற சைவ சமய விவகாரக் குழு தலைவருமான திரு.இ.த.ஜெயசீலன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கௌரவ முதல்வர் திரு.வி.மணிவண்ணன் அவர்களும் சிறப்பு அதிதியாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்விற்கான ஆசி உரைகளை நல்லை ஆதீன முதல்வர், வீணாகான குருபீடாதிபதி சிவ ஸ்ரீ சபா வாசுதேவக் குருக்கள், செஞ்சொற் செல்வர் ஆறு திருமுகன் ஆகியோர் வழங்கினர். வரவேற்பு உரையினை மாநகர பிரதி ஆணையாளர் திரு.ந.பிரபாகரன் அவர்களும் நூல் வெளியீட்டு உரையை மாநகர செயலாளர் திரு.அ.சீராளன் அவர்களும் வழங்கினர். நூல் நயப்புரை செந்தமிழ் சொல்லருவி ச.லதீசன் அவர்களால் வழங்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டிற்கான யாழ் விருது வாழ்வகத் தலைவர் மதிப்பார்ந்த திரு.ஆ.இரவீந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நல்லைக்குமரன் மலர் – 29 மாநகர முதல்வர் அவர்களால் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *