I Road திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் வீதிகளில் வைமன் வீதியும் ஒன்று. கடும் மழை காரணமாக வைமன் வீதியின் 100m தூரத்திற்கு வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நின்றமையால் அவ்வீதியால் பொதுமக்கள் போக்குவரத்து செய்யமுடியாத நிலையில் பெரும் இடர்களை எதிர்நோக்கி இருந்தனர்.
குறித்த வீதி புனரமைப்பின் போது வெள்ளநீர் வடிந்து ஓடுவதற்கு வசதியாக நிரந்தரமான வடிகால் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. எனினும் தற்போது மக்களுக்கு ஏற்படுகின்ற வெள்ள இடரினை சீர்செய்யும் வகையில் யாழ் மாநகரசபையால் I-Road திட்ட பொறியியலாளர்கள் மற்றும் Maga ஒப்பந்தகாரர் ஆகியோரிடம் வெள்ளநீர் பிரச்சினைக்கு தற்காலிக தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இக் கோரிக்கையினை ஏற்று குறித்த பகுதியில் காணப்பட்ட வெள்ளநீரானது வழிந்தோடுவதற்கு ஏற்றவாறு தற்காலிக வடிகால் அமைப்பினை உருவாக்கி இப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்திருந்தனர்.