யாழ்.நகர் பகுதியில் காணப்படும் பிரதான வெள்ளவடிகால் பல வருடங்களின் பின்னர் நேர்த்தியாக தூர்வாரப்பட்டன. இந் நிலையில் மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் அவ் வடிகாலுக்கூடாக யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அருகில் காணப்படும் புல்லுக்குளத்திற்கான நீர் வரத்தினை அதிகரிக்கும் நோக்குடன் கூடிய அவசரமான கடினமான பணி இன்று காலை யாழ்.மாநகர சபை பணியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் புல்லுக்குளத்திற்கு நீர் வரும் மதகினை அகலப்படுத்தியதோடு அதனை ஆழப்படுத்தி நீர்வரத்தினை அதிகரிக்கச் செய்த நிலையில் இக் கடினமான பணி சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுக்கு வந்தது.