செய்திகள்

ஆரியகுளம் துரித அபிவிருத்தித் திட்டம் -2021

‘தூய அழகிய நகரம்’ என்ற செயற்றிட்டத்தின் கீழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் எடுத்த பெரும் முயற்சியின் பேறாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் நகரின் மத்தியில் காணப்படும் ஆரியகுளத்தினை புனரமைத்து அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின் திட்டவரைபு இன்று அங்குரார்பணம் செய்யப்பட்டது.


யாழ்.மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் ஒரு புதிய அத்தியாயமாக நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்படவிருக்கின்ற குறித்த துரித செயற்றிட்டத்தின் முதலாம் இரண்டாம் கட்டங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் நிறைவுக்கு வரும்.


குறித்த துரித செயற்றிட்டத்திற்காகன திட்ட வரைபினை Canopus நிறுவனத்தின் உரிமையாளர் துளசிவர்மன் அழகுற வடிவமைத்திருந்தார் குறித்த திட்ட வரைபிற்கான நிஜ வடிவத்தினை Mode Engineering நிறுவனத்தினர் வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *