செய்திகள்

குருநகர் கடற்கரை யாழ். மாநகர சபையால் தூய்மைப்படுத்தல்

தூயகரங்கள் தூயநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ் . மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பணிப்பின் பேரில் யாழ். மாநகர சபையின் ஆளுகைக்குட்பட் ட பகுதிகளைத் தூய்மைப்படுத்தல் செயற்றிட்டத்தின் தொடர்சியாக நேற்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் யாழில் இரு இடங்களில் சமநேரத்தில் தூய்மைப் படுத்தல் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

அந்தவகையில் யாழ் . முற்றவளிப்பகுதியில் வளர்ந்திருக்கும் பார்த்தீனியச் செடிகளினை அகற்றுதல் .யாழ் குருநகர் பகுதியில் கடற்கரைப் பகுதியினைத் தூய்மைப்படுத்தல் ஆகிய செயற்பாடு கள் நடைபெற்றன .

குறித்த பகுதியில் யாழ் மாநகரசபை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் பங்களிப்புடனும் , பெரும் மக்கள் பங்கேற்புடனும் குறித்த தூய்மைப்படுத்தல் செயற்பாடுகள் நடந்துள்ளன . அதேபோன்று யாழ் குருநகர் கடற்கரைப் பகுதியிலும் தூய்மைப்படுத்தல் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இதேவேளை , யாழ் . மாநகர முதல்வர் , யாழ் மாநகர சபையின் தூய்மைப் பணியாளர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் , யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் பங்கேற்புடன் மேற்படி செயற்திட்டம் இடம்பெற்றது . உரிய சுகாதார நடைமுறைகளுடன் குறித்த தூய்மைப்படுத்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *