நகரின் நோக்கு

நகரின் நோக்கானது தொழிற்பாட்டு ரீதியாக வினைத்திறன் கொண்ட பொருளாதார ரீதியாக நடைமுறைக்கு உகந்த, சூழல் ரீதியாக நிலைத்திருக்கக்கூடிய, சவால்களுக்கு முகங் கொடுக்கத்தக்க வகையில் சமுதாய இணக்கப்பாடுடைய, வாழ்க்கைத்தரத்தினது மேம்பாட்டுடன் கூடிய மனங்கவரும் நகரமொன்றனைத் திட்டமிடலாகும்.

குறிக்கோள்கள்

 • நகரினை நவநாகரிகமான நகரமொன்றாக அபிவிருத்தி செய்தல்
 • போக்குவரத்து முறைமையினை மேம்படுத்தலும், அதன் வினைத்திறனை அதிகரித்தலும், நெரிசலைக் குறைத்தலும்
 • இனிவரும் வருடத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல்
 • இயற்கையின் சமனிலையுடன் ஒத்திசைவானதும்,சூழல் ரீதியாக நிலைநிறுத்தக்கூடியதுமான அபிவிருத்தியினை உறுதி செய்தல்.
 • வீடமைப்பு அடிப்படையினது தரத்தினையும், எண்ணிக்கையினையும் அவற்றுடன் உறவுபடும் சமுதாய உட்கட்டமைப்பினையம் அதிகரித்தல்
 • காணி விலைகளின் சந்தர்ப்பவாத அதிகரிப்புகளையும், நகரின் நிலப்பரப்பின் விரும்பத்தகாத உபபிரிவுகளையும் அடக்கும் வகையில் வர்த்தக, வதிவிட பொழுதுபோக்குத் தேவைகளுக்கெனக் கட்டடம் அமைக்கக்கூடிய பங்குபற்றுகைளை ஊக்குவித்தல்.
 • நகரின் திட்டமிடல் சட்டத்திற்குட்பட்ட அபிவிருத்திச் செயற்திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றிலான பயன்பெறுவோரின் பங்குபற்றுகைளை ஊக்குவித்தல்
 • ஓவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் பாதுகாப்பான தண்ணீர் வசதி, சுகாதாரம், மாசற்ற சூழல், ஆரோக்கியம், கல்வி, போஷாக்கு, தொழில் பொதுமக்கள், பாதுகாப்பு, நகர்தன்மை என்பன கிட்டுதலை உறுதி செய்தல்
 • சிறந்த நகராண்மையூடாக ஒவ்வொரு பிரஜைக்கும் தனது சமுதாய பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கெனத் தங்களது ஆற்றல்களை முழுமையாகப் பாவிப்பதனை அனுமதிக்கும் அடித்தளமொன்றினை வழங்குதல்
 • செய்தியும் நிகழ்வும்

  விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

  யாழ்ப்பாணம் மாநகர சபை

  மேலும் படிக்க

  4காவது காலாண்டுக்கான கணக்காய்வு குழுக்கூட்டம்.

  யாழ்ப்பாணம் மாநகர சபை

  மேலும் படிக்க

  தைப்பொங்கல் விழா

  யாழ்ப்பாணம் மாநகர சபை

  மேலும் படிக்க