யாழ்ப்பாண வரலாறு

யாழ்ப்பாண நகரம் அல்லது யாழ்ப்பாணப் பட்டினம் என்பதனுடைய நிர்வாக பரப்பானது யாழ்ப்பாண மாநகரசபையினது நிர்வாகப் பரப்பு என ,இனங்காணப்படும். அதனது தோற்றுவாயானது கி.பி 13ஆம் நூற்றாண்டிற்கும் 16ஆம் நூற்றாண்டுக்கும் ,இடைப்பட்ட காலப்பகுதியில் பலம் பொருந்தியதாக விளங்கிய மத்திய காலத்தைய யாழ்ப்பாண தமிழ் ,இராச்சியங்களுடன் பொருத்திப் பார்க்கப்படமுடியும். தனது 'இலங்கையின் வரலாறு ' (A History of Srilanka) என்ற நூலின் 84ஆம் பக்கத்தில் பேராசிரியர் கே.எம்.டீ.சில்வா பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ஆரியச்சக்கரவர்த்திகளின் கீழிருந்த யாழ்ப்பாணம் தீவிலேயே மிகப்பலம் பொருந்திய இராச்சியமாக இருந்தது.

1619ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தினைக் கைப்பற்றுவதில் வெற்றியடைந்த பொழுது நல்லூர் அதன் தலைநகரமாக விளங்கியது. தமிழ் மக்களின் எதிர்ப்புக் காரணமாகப் போர்த்துக்கேயர்களினால் தொடர்ந்தும் நல்லூரைத் தமது தலைநகரமாக வைத்திருக்க இயலவில்லை. அதன் விளைவாகவும், தற்காப்புக்குச் சுலபமானதாகவும், கடல் வழி மீள்பலப்படுத்துகைக்கு உதவியாகவிருந்ததனாலும் ஃபிலிப் த ஒலிவெரிரா கோட்டையினை நிறுவி அதனைத் தலைநகராக்கிக் கொண்டான் .இப்பகுதியானது இன்றையநகர் பின்னாட்களில் உருவாவதற்குக் கருவாக அமைந்தது.

போர்த்துக்கேய ஆட்சி 39 ஆண்டுகளுக்கு நிலைத்தது. 1658 ஆம் ஆண்டு ஒல்லாந்தர், போர்த்துக்கேயரை வெளியேற்றுவதில் வெற்றியடைந்தனர். கோட்டையைச் சூழவிருந்த சிறிய போர்த்துக்கேய நகரை ஒல்லாந்தர் வடக்கே தேவாலய வீதியையும், மேற்கே முற்றவெளியையும், தெற்கே கடற்கரை வீதியையும், கிழக்கே 3ம் குறுக்குத்தெருவினையும் எல்லைகளாகக் கொண்டதாக அபிவிருத்தி செய்தனர் எனத் தோன்றுகின்றது.

யாழ்ப்பாணம் பொதுநூலகம் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் தேவாலய வீதி முனீஸ்வரன் கோவிலுக்கு நேரெதிரே காங்கேசன்துறை வீதியில் ஆரம்பமானது என்பதும், 3ஆம் குறுக்குத்தெருவிவின் முழு நீளமும் யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது என்பதும் சுவாரஸ்யமான விடயங்களாகும். ஓல்லாந்தர் இருந்த நிர்வாக, வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்திருந்தனர். வர்த்தக நடவடிக்கைகள் பறங்கித்தெரு அல்லது புறக்கோட்டை (தமிழில் பேட்டை) என்று அழைக்கப்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. இப் பகுதியே ஒல்லாந்தரின் குடியிருப்பு பகுதியாகவும் இருந்தது.

1950 களின் மத்திவரை, பிரதான வீதி என அறியப்பட்ட பகுதி வெற்றிகரமாக ,இயங்கி பல வர்த்தக நிறுவனங்களுடன் கூடிய முக்கியத்துவத்தினைத்தக்க வைத்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கேசன் துறை வீதி, மானிப்பாய் வீதி-, ஊர்காவற்துறை வீதி, பருத்தித்துறை வீதி, பலாலி வீதி ஆகியன யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியைத் தமது ஆரம்ப புள்ளியாகதக் கொண்டுள்ள அதே சமயம் கண்டி வீதியானது தனது ஆரம்பத்தினை கோட்டைப் பகுதிக்கு ஏறத்தாழ 2கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பஸ்தியான் அல்லது சென்ஜோன் சந்தியில் கொண்டுள்ளது.

கோட்டையை அமைக்கும் முகமாக நல்லூரிலுள்ள தமிழரசர்களின் அரசமாளிகைக்கட்டங்கள் யாவற்றையும் போர்த்துக்கேயர் அழித்தனர் என்று குறிப்பிடப்படுகின்றது. ஏன்னினும் 1907,ல் ஆங்கிலேயர்கள் ஒன்றே ஒன்றாக எஞ்சியிருந்த அரண்மனை நுழைவாயிலைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது ஆறுதலளிப்பதாக உள்ளது. இந் நுழைவாயில் ,இன்றும் பேணப்பட்டு வருகின்றது. சங்கிலித்தோப்பு, பண்டார மாளிகை,ராசாவின் தோட்டம் ஆகிய பெயர்கள் நகரிலுள்ளே ,இன்றும் பாவனையிலுள்ள ,இவையே நல்லூர் தமிழ் ,இராச்சிய்தின் தெளிவான சாட்சிகளாக நிலவுகின்றன.

செய்தியும் நிகழ்வும்

விழிப்புணர்வூட்டல் செயலமர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபை

மேலும் படிக்க

4காவது காலாண்டுக்கான கணக்காய்வு குழுக்கூட்டம்.

யாழ்ப்பாணம் மாநகர சபை

மேலும் படிக்க

தைப்பொங்கல் விழா

யாழ்ப்பாணம் மாநகர சபை

மேலும் படிக்க